சீன அதிபர் ஜி ஜின்பிங் கடைசியாக கொரோனா அதிகரிப்பதை ஒப்பு கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன அதிபர் ஜி ஜின்பிங், புது வருடத்திற்கு முந்தைய நாள் உரையாற்றிய போது, கொரோனாவிற்கு எதிராக கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது, பொதுவான விதிமுறைகள் தான் என்று கூறினார். எனினும், மக்கள் அதனை கடுமையாக எதிர்த்தனர். வீதிகளில் இறங்கி கடும் போராட்டத்தை மேற்கொள்ள தொடங்கினர்.

அதன் பிறகு, கடந்த டிசம்பர் மாதம் ஏழாம் தேதி அன்று கடுமையான நடவடிக்கைகளை நீக்க அதிபர் உத்தரவிட்டார். ஆனால், அதன் பிறகு நாடு முழுக்க கொரோனா அதிவேகத்தில் பரவ தொடங்கியது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டது.

தகனம் செய்யப்படும் இடங்கள், பிணங்களால் நிரம்பியது. எனினும் டிசம்பரில் ஒரு நபர் மட்டும் உயிரிழந்ததாக அரசு அதிகாரிகள் கூறியிருந்தார்கள். இந்நிலையில் அதிபர் உண்மையை ஒத்துக் கொண்டார். நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதில் தவறுகள் ஏற்பட்டதாக கூறியிருக்கிறார். மக்களின் உயிர் மற்றும் பொருளாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் இனிமேல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் சவால்களை துணிச்சலோடு சந்திக்க அரசாங்கம் தயார் நிலையில் இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.

இது மட்டுமல்லாமல், ஜனவரி மாதம் தொடங்கியதிலிருந்து ஒவ்வொரு நாளும் 25,000 நபர்கள் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழப்பார்கள் என்றும் டிசம்பர் முதல் தேதியிலிருந்து ஒவ்வொரு நாளும் 9,000 நபர்கள் இறந்திருக்கிறார்கள் என்றும் அந்நாட்டின் முதன்மை நிறுவனம் ஒன்று கணித்து கூறியிருக்கிறது.