இந்தியாவுக்கு அருகே பயங்கரவாத ஆபத்து இருப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு மிக அருகே பயங்கரவாத மையம் அமைந்துள்ளதாக பாகிஸ்தானை குறிப்பிட்டு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சாடியுள்ளார். ஆசிரியா நாட்டின் மத்திய வெளி விவகார அமைச்சர் ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் அந்நாட்டின் வெளி விவகார அமைச்சர் அலெக்ஸாண்டர், மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் எல்லை கடந்த பயங்கரவாதம், வன்முறை, தீவிரவாதம் மற்றும் அடிப்படை வாதம் உள்ளிட்டவற்றை பற்றி விரிவாக பேசினோம் என்றும் பயங்கரவாத விளைவுகளை ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் அடக்கி விட முடியாது எனவும் தெரிவித்தார். பயங்கரவாதத்தின் மையம் இந்தியாவுக்கு மிக அருகே அமைந்துள்ளது என்றும் தங்களுடைய அனுபவங்கள் மற்றும் பார்வைகள் பிறருக்கு பயனுள்ளவையாக இருக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.