சீனாவின் தலைநகரமான பெய்ஜிங்கில் மறு உத்தரவு வரும் வரை Work From Home இல் பணி செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வீட்டிலிருந்தே வேலை பார்ப்பது (Work From Home )  என்ற முறையை நாம் பெரிதும் அறிந்த காலகட்டம் கொரோனா அலையின் போது தான். சீன மக்களை வாட்டி வதைத்து பின் உலகம் முழுவதும் பரவி அனைவரையும் துன்பப்படுத்திய கொரோனா பல மாற்றங்களை உலகில் நிகழ்த்தி சென்றது. அதில், முக்கியமான ஒன்று இந்த Work From Home. 

தற்போது வெப்ப அலையின் காரணமாக சீனாவின்  தலைநகரமான பெய்ஜிங்கில் இந்த Work From Home  மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 1961க்கு பிறகு சீனாவில் தற்போது கடும் வெயிலை அந்த மக்கள் சந்தித்து வருவதாகவும், சராசரியாக 40 டிகிரி செல்சியஸ் வெப்ப சூழ்நிலையில்  மக்கள் அவதிப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடப்பு மாதமான ஜூலை மாதத்தில் இந்த வெப்பம் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சத்தால் இந்த வெயிலின் தாக்கத்தை சமாளிக்கும் பொருட்டு பணியாளர்களை மறு உத்தரவு வரும் வரை வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த Work From Home  வசதி  இல்லாத அரசு சார்ந்த பணிகளுக்கு முறையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதே போல இந்த வசதி இல்லாத தனியார் நிறுவனங்கள் பணியாளர்களுக்கு  தகுந்த பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.