சென்னை மற்றும் கொல்கத்தா இடையே தினசரி மற்றும் வாராந்திர ரயில்கள் என மொத்தம் 12 ரயில்கள் இயக்கப்படுகிறது. இதில் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் முக்கிய பங்கு வகிக்கிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து 1691 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் நிலையில் 28 மணி நேரம் 30 நிமிடத்தில் இலக்கை சென்றடைகிறது.
இந்த ரயில் தமிழ்நாட்டில் இருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்நிலையில் தற்போது ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி தினசரி சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 7.15 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 11.5 மணிக்கு சென்ட்ரலில் இருந்து கிளம்பும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனால் நேற்று இரவு முன்னதாகவே ரயில் நிலையத்திற்கு சென்ற பயணிகள் 3 மணி நேரம் வரை ரயில் நிலையத்தில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.