கள்ளக்குறிச்சி மாவட்டம் எஸ்.பி ஆக இருக்கக்கூடிய பகலவன் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் டிஐஜியாக அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். அதேபோல சென்னையின் தி.நகர் டிசி பணியிட இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரத்தில் சைபர் க்ரைம்ல இருந்த பாஸ்கரன், தற்போது எஸ்பி ரேஞ்சுக்கு பணி உயர்வு செய்யப்பட்டு, துணை ஆணையர் ஆவடிக்குமாற்றப்பட்டுள்ளார். ரோகித் நாதன் ராஜகோபால்  போதைப்பொருள் தடுப்பு எஸ்பி ஆக இருந்தார். துணை ஆணையர் மயிலாப்பூருக்கு மாற்றப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி கமிஷனராக ராஜேந்திரன் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஷியாமளா தேவி பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல  பெரம்பலூர் மாவட்டத்தின் எஸ் பி ஆக இருக்கக்கூடிய மணி தற்பொழுது துணை ஆணையர் தாம்பரத்துக்கு  இடம் மாற்றப்பட்டு இருக்கிறார்.

மோகன்ராஜ் மதுரை துணை ஆணையராக இருக்கக்கூடியவர். அவர் கள்ளக்குறிச்சிக்கு புதிய எஸ்பியாக இன்று முதல் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். தமிழகம் முழுவதும் இப்படி 45 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வும்,  அதே போல புதிய பணியிடங்களும் வழங்கப்பட்டிருக்கிற ஆணையை உள்துறை செயலாளர் பணிந்திர ரெட்டி வெளியிட்டுள்ளார்.