SDPI மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி,  2016 முதல் ஹாஜிகளுக்கு மாதம் தோறும் 20 ஆயிரம் ரூபாய் மதிப்பூதியம்  கொடுக்கின்ற திட்டம் தொடங்கியது அம்மாவுடைய அரசு தான். உலமாக்களுக்கு ஓய்வூதிய பயனாளிய எண்ணிக்கையை 2400இல்  இருந்து 2600 ஆக உயர்த்தப்பட்டது. அதேபோல அம்மாவுடைய அரசு ஓய்வூதிய தொகை 750 இலிருந்து 3000 ஆக உயர்த்தப்பட்டது. உலமாக்களுக்கு புதிய இருசக்கர வாகனம் வாங்குவதற்கு 25 ஆயிரம் ரூபாய் மானியம்.

இரு சக்கர வாகனம் வாங்கும் பொழுது… மணியத்தையும் அந்த விலைக்கு ஏற்றவாறு 50% வழங்கப்பட்டது.  வக்பு வாரியத்துக்கு ஆண்டு நிர்வாக மானியமானது அரசு 2 கோடியாக உயர்த்தியது. பள்ளிவாசல் தர்காக்கள் பழுதுபார்த்தல், புனரமைத்தல்  பணிகளை  மேற்கொள்ள தொகுப்பு நிதி மூன்று கோடி ரூபாய் உருவாக்கப்பட்டது.  இஸ்லாமியருக்கு வகுப்பினருக்கு நேரடி முறையில் நிரப்படாத பணியிடங்களுக்கு அரசாணை  வெளியிடப்பட்டது.

2018 ஆம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டம் கஜா புயல் கனமழைப் பொழிந்தது. நாகூர் தர்க்கா குளக்கரை சுற்றுச்சுவர் இடிந்து சரிந்து விட்டது. நான் நாகூர் தர்காவிற்கு சென்று அங்கே… தெழுகை நடத்திவிட்டு, அங்கே இருக்கின்ற குளக்கரையில் இருக்கின்ற  இஸ்லாமிய பெரு மக்கள் சுற்றி காட்டினார்கள். இதை அரசு தான செலவு செய்ததற்கு கட்டிக் கொடுக்க வேண்டும் கோரிக்கை வைத்தார்கள்.  உடனடியாக 4 கோடியே 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து நாகூர் தர்கா குளக்கரை  சீர் செய்த அரசாங்கம் அம்மாவுடைய அரசாங்கம் என பேசினார்.