ASTROTALK CEO புனீத் குப்தா பயனர்களை  அசத்தும்  வகையில்,  அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்,அதன்படி,  நடப்பு உலகக் கோப்பையில் இந்தியா வெற்றி பெற்றால், astrotalk நிறுவனம் அதன் பயனர்களுக்கு 100 கோடி ரூபாயை பிரித்தளிக்கும் என  அறிவித்தார். இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்தியா வெல்ல வேண்டும் என்ற தனது தீவிர விருப்பத்தை வெளிப்படுத்திய குப்தா,

இந்தியா கோப்பையை  வென்றால் மேலே கூறியபடி,  ரூபாய் 100 கோடியை பயனர்களுடன் பகிர்ந்து கொள்வதாக உறுதியளித்துள்ளார்.  ASTROTALK CEO -ன்  இந்த பேச்சு ஏற்கனவே அந்த செயலியை  பயன்படுத்துவோருக்கு  மகிழ்ச்சி ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல்,  புதியதாக பலரும் அதை இன்ஸ்டால் செய்வதற்கு வழி வகுத்துள்ளதாக கூறப்படுகிறது.