10, 12-ம் வகுப்புகளுக்கான 2023 ஆம் வருடம் பொதுத்தோ்வு துவங்க இருக்கும் நிலையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) விரைவில் நுழைவுச் சீட்டினை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான நுழைவுச்சீட்டு வெளியானதும் மாணவர்கள் www.cbse.nic.in (அ) www.cbse.gov.in என்ற அதிகாரப்பூர்வமான இணையதளங்களில் இருந்து நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

இரு வகுப்புகளுக்கான பொதுத்தோ்வுகளும் 2023ம் வருடம் பிப்,.15-ஆம் தேதி துவங்கி நடைபெற இருக்கிறது. இதில் 10ம் வகுப்பு பொதுத்தோ்வு மாா்ச் 21ம் தேதியும், 12ம் வகுப்பு பொதுத் தோ்வு ஏப்ரல் 5ம் தேதியும் நிறைவடைய இருக்கிறது. தேர்வுகள் காலை 10:30 மணிக்கு துவங்கி மதியம் 1:30 மணிக்கு நிறைவடைகிறது.  கூடுதல் விவரங்களுக்கு cbse.nic.in எனும் சிபிஎஸ்இ வலைதளத்தை பாா்த்துத் தெரிந்துக்கொள்ளலாம்.