உலக இணைய பாதுகாப்பு நாளை முன்னிட்டு இணையத்தில் பயனர்கள் எவ்வாறு தங்களது தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பது என்பது உள்ளிட்ட பல குறிப்புகளை வாட்ஸ்அப் வெளியிட்டு உள்ளது. பிப்,.7 ஆம் தேதி இணைய பாதுகாப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு வாட்ஸ்அப், சமூகவலைத்தளப் பக்கங்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்த தகவல்களை வாட்ஸ்அப் வெளியிட்டுள்ளது.

பயனர்கள் தங்களுடைய தனிப்பட்ட தகவல்களை மற்றவர்களிடம் பகிரக்கூடாது. தனி நபர் தங்களது புரொஃபைல் பிக்சர், கடைசியாக ஆன்லைன் வந்தது, ஆன்லைன் டேட்டஸ், தங்களை பற்றி, ஸ்டேட்டஸ் என அனைத்தையும் யாரெல்லாம் பார்க்கலாம் என்பதை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

அதில் செல்லிடப்பேசி எண் நம்மிடம் இருக்கும் கான்டாக்ட் ஒன்லி (அ) யாருமே பார்க்கக்கூடாது என்பதை கிளிக் செய்துக்கொள்ளலாம். அதன்பின் பார்வார்டு ஆகும் அனைத்துத் தகவல்களையும் உண்மைதானா என்பதனை அறியாமல் மற்றவர்களுக்கு பகிர்வதைத் தடுக்க பல கட்டுப்பாடுகளை வாட்ஸ்அப் கொண்டு வந்திருக்கிறது. ஆகவே உண்மை என்று தெரியாத எதையும் யாரும் பகிரவேண்டாம் என கேட்டுக்கொள்கிறது.