நீண்ட தூரம் பயணத்திற்காக மக்கள் ரயில் பயணத்தை தேர்ந்தெடுக்கின்றனர். பொது போக்குவரத்துகளில் ஒன்றான ரயிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பயணிகளுடைய தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாகவும் ரயில்வே துறை பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் IRCTC நிறுவனம் ஆன்லைன் முறையில் உணவு விநியோகம் செய்து வருகிறது.

இந்த சேவையை www.catering.irctc.co.in மற்றும் food on track என்ற செயலியின் மூலமாக சேவைகளை செயல்படுத்தி வருகிறது. இதில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான உணவுகளை தேர்வு செய்து ரயில் நிலையத்திலேயே பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டம் அனைத்து தற்போது சில ரயில்களில் மட்டுமே இயக்கப்பட உள்ளது. அதன்படி இந்த திட்டம் பயணிகளுக்கு இடையே நல்ல வரவேற்பு பெற்றால் அனைத்து ரயில்களிலும் விரைவில் அமல் படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.