இந்தச் சம்பவத்தில், இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்), மும்பை காவல்துறை, மத்தியப் புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) உள்ளிட்ட பல்வேறு அரசு நிறுவனங்களின் அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்யும் மோசடி சம்பவம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். 

  1. ஆரம்ப தொடர்பு: அக்டோபர் 27 அன்று, தீப்திக்கு TRAI அதிகாரி என்று கூறிக்கொள்ளும் ஒருவரிடமிருந்து அழைப்பு வந்தது. அவரது மொபைல் போனின் சிம் கார்டு ப்ளாக் செய்யப்படப் போவதாக எதிர் அழைப்பாளர்தெரிவித்துள்ளார்.
  1. சட்டவிரோத நடவடிக்கை அச்சுறுத்தல்: ஆள்மாறாட்டம் செய்தவர் தீப்தியிடம், அவரது ஆதார் ஆவணத்தைப் பயன்படுத்தி, அவரது பெயரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண், சட்டவிரோத செயல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதாககூறியுள்ளார் . அதன்படி பெண்களை துன்புறுத்துதல் மற்றும் சட்டவிரோத விளம்பரங்களை ஊக்குவித்தல் போன்ற நடவடிக்கைகள் காரணமாக தீப்தியின் சிம் கார்டைத் பிளாக் செய்யப்போவதாக மிரட்டி, அவ்வாறு செய்யக்கூடாதெனில் காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார்.
  1. போலி போலீஸ் ஸ்டேஷன் அமைப்பு: தீப்தி ஸ்கைப் அழைப்பு மூலம் போலி  போலீஸ் ஸ்டேஷன் ஒன்றுடன் இணைக்கப்பட்டார். காவல் நிலையத்தைப் போன்ற ஒரு அமைப்பையும் , தனி நபர்கள் காவல்துறை அதிகாரிகளைப் போல உடையணிந்திருந்தையும் கண்டுள்ளார். இதையடுத்து அவர்கள்  அவரது, ஆதார் அட்டையைப் பயன்படுத்தி கனரா வங்கியில் அவர்  பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். இந்த கணக்கு பணமோசடிக்கு பயன்படுத்தப்படுவதாகவும், மும்பையில் அவர் மீது வழக்கும் கைது வாரண்டும்  உள்ளது என்றும் அவர்கள் கூறியதோடு,  விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு வற்புத்தியுள்ளனர். 
  1. சிபிஐ ஆள்மாறாட்டம்: சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது நரேஷ் கோயல் என்ற தொழிலதிபரின் வீட்டில் 240 டெபிட் கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக சிபிஐ அதிகாரி போல் வேடமிட்டு வந்த ஒருவர் தீப்தியிடம் தெரிவித்தார். இந்த டெபிட் கார்டுகளில் ஒன்று தீப்தியின் பெயரில் இருப்பதாகவும், இதன் காரணமாக தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
  1. மோசடி: போலி அதிகாரிகளின் அழுத்தம் மற்றும் சட்ட விளைவுகளுக்கு பயந்து, தீப்தி 1.4 லட்சத்தை மோசடி செய்தவர்கள் வழங்கிய கணக்கிற்கு மாற்றினார். அவர்களும் வங்கி கணக்கு பரிவர்த்தனைகளை அவர்களின் ஆடிட்டர் சரிபார்த்த பிறகு, மூன்று நாட்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும் என்று உறுதியளித்துள்ளனர்.
  1. மோசடியை உணர்ந்து கொள்ளுதல்: சம்பவத்திற்குப் பிறகு, தீப்தி மோசடி செய்பவர்களின் கூற்றுகளை சரிபார்க்க முடிவு செய்து இணையத்தில் தேடினார்.அப்போது தான்  ஆள்மாறாட்டம் செய்பவர்களால் தான் ஏமாற்றப்பட்டதைக் தீப்தி உணர்ந்துள்ளார்.
  1. புகார் அளித்தல்: இந்நிலையில் மறுநாள், தீப்தி நடந்த சம்பவம் குறித்து தெரிவித்து மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது புகார் அளிக்க காவல்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.