உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொராதாபாத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு பெண்ணும் அவரது நண்பர்களும் பைக்கில் சென்றுள்ளனர். அப்போது அந்த பைக்க்கு  முன்பாக பூனை ஒன்று சாலையை கடந்துள்ளது. இதனால் அந்த பூனையை அந்தப் பெண்ணும் அவரது நண்பர்களும் அடித்து துன்புறுத்தி உயிருடன் தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இதில் அந்தப் பூனை துடிதுடித்து உயிரிழந்தது. மேலும் இதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களிலும் வெளியிட்டுள்ளனர்.

இதனை அடுத்து இந்த வீடியோ டெல்லி வனவிலங்கு உச்ச கட்டுப்பாட்டு பணியகத்திற்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் காவல்துறையினர் அதிரடியாக நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டதால் விசாரணை நடந்து வருகிறது. இதனால் வீடியோவை இதற்கு மேல் பகிர முடியாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வீடியோவில் தெரிந்த அவர்களது பைக் பதிவு எண் மூலம் போஜ்பூரை சேர்ந்த பிரியா என்பது தெரியவந்தது. இதனை அடுத்து வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பிரியா மற்றும் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் விலங்கு ஆர்வலர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.