
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பழைய பேட்டை அன்னவரதர் சுந்தர விநாயகர் கோவில் தெருவில் விவசாயியான வேல்முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று வேல்முருகன் காரில் தனக்கு சொந்தமான தோட்டத்திற்கு சென்றார். பின்னர் மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அருகே சென்ற போது சுரண்டை நோக்கி சென்ற பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த வேல்முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று வேல்முருகனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.