
கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கூடாது என முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தாலும் சரி, எடியூரப்பா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தாலும் சரி, குமாரசாமி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தாலும் சரி அவர்கள் எப்போதும் எடுக்கக்கூடிய ஒரே முடிவு தமிழகத்திற்கு தண்ணீர் தர இயலாது என்பதுதான்.
கடந்த 20 – 30 ஆண்டுகளாக இதுதான் மாறாத கட்சியாக இருந்து வருகிறது. தற்பொழுதும் அதே காட்சி தான் வந்திருக்கிறது. கிட்டத்தட்ட 1 மணி நேரத்துக்கு மேலாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.