உத்திர பிரதேசம் மாநிலம் பல்லியா மாவட்டத்தில் உள்ள பக்ரி பகுதியில் 14 வயது சிறுமி குடும்பத்துடன் வசித்து வருகிறார். அந்த சிறுமி ஒருநாள் பள்ளி முடிந்து வீடு திரும்பி கொண்டிருக்கும்போது அடையாளம் தெரியாத 3 நபர்கள் தவறான நோக்கத்துடன் கடத்தி சென்றுள்ளனர். பின்னர் அந்த சிறுமியின் கை, கால்களை கட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்பு அந்த சிறுமி இவர்களிடமிருந்து தப்பித்து வந்துள்ளார்.

ஆனாலும் சிறுமியை விடாமல் மூவரும் சேர்ந்து அடித்து கால்வாயில் வீசி உள்ளனர். இந்நிலையில் சிறுமியை பார்த்த அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிறுமியின் தந்தை தன் மகளுக்கு நேர்ந்த வன்முறையை காவல்துறையில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பெயரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த 3 குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது