நாட்டின் பாதுகாப்பிற்கு பொறுப்பான அதிகாரிககே தவறான தகவல்களை கொடுத்தால் பாதுகாப்பு எந்த அளவுக்கு இருக்கும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

உரிய விதிகளை பின்பற்றாமல் ராணுவ வீரர்களை தேர்வு செய்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய  வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி  பட்டு தேவானந்த் மத்திய அரசு வழக்கறிஞரிடம் ஒரு சில முக்கியமான கருத்துக்களை தெரிவித்தார்.

மத்திய அரசு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் கொடுத்த தகவல்கள் அனைத்தும் தவறாக உள்ளது.  தவறான தகவல்களை சீரிடப்பட்ட கவரில் வேறு கொடுத்திருக்கிறார். நாட்டின் பாதுகாப்பில் ஈடுபடும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளே இவ்வாறு தவறான தகவல்களை தரலாமா ?

பிறகு நாட்டின் பாதுகாப்பு எந்த அளவுக்கு இருக்கும் என கேள்வி எழுப்பியதோடு, உங்களின் சிஸ்டமே சரியில்லை எனக் கூறி இந்த வழக்கில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்திருக்கிறார்.