
ஆப்பிரிக்க நாடான நைஜீரியா பகுதியில் ஸ்வாபோ கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இக்கட்சியின் தலைவர் நெடும்போ நந்தி நதைத்வா. இந்த கட்சியின் வேளாண் துறை மந்திரியாக மெக் ஆல்பர்ட் ஹெங்காரி இருந்தார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு அப்பகுதியில் உள்ள 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் காவல்துறையினர் ஹெங்காரியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு தற்போது குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அப்போது ஹெங்காரி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற நிலையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் நீதிமன்றம் அவரை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.