திமுக தொண்டர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்னொரு திட்டம் கேட்டுட்டே இருந்தாங்க… எப்ப கொடுக்கப் போறீங்கன்னு…  இதோ தலைவர் அறிவிச்சிட்டாரு  பேரறிஞர் அண்ணா உடைய பிறந்தநாள் செப்டம்பர் 15 ஆம் தேதி… தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் கலைஞர் மகளிர் உதவித் தொகை திட்டம் . ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் அதை அறிவிச்சிட்டாரு. இன்னும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு சொல்கிறேன்…  நம்முடைய திராவிட மாடல் அரசு சொல்றோம் . திராவிடல் மாடல் அரசுன்னா என்னன்னு தலைவர் அடிக்கடி சொல்லி இருக்கார். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும்.

இந்த அரசு போடுகின்ற திட்டங்கள் வகுக்கின்ற திட்டங்கள்… தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் ஏதாவது ஒரு வகையில் பயன்பட்டு இருக்க வேண்டும் என்பதுதான் நம்முடைய திராவிடம் மாடல் அரசின் லட்சியம். ஒரு சிறந்த உதாரணத்தை சொல்லுகிறேன்? திராவிடம் மாடலுக்கும்,  பிஜேபி மாடலுக்கும்…  ஆரிய மாடலுக்கும் உள்ள வித்தியாசம். ஒரு பத்திரிக்கையில் காலை உணவு திட்டம் பற்றி எவ்வளவு கேவலமாக கொச்சைப்படுத்தி…. விமர்சனம்  பண்ணி எழுதி இருக்காங்க…..  நீங்க எல்லாம் பார்த்து இருப்பீங்க.

அந்த அளவுக்கு அந்த கும்பலுக்கு திராவிடம் மாடல் அரச பாத்து…. நம்முடைய மாணவர்கள் கல்வி பயில்வதை பார்த்து.. வயித்தெரிச்சல். தமிழ்நாட்டில் மட்டும் எப்படி கல்வி  சிறந்து விளங்குது ? ஒவ்வொரு திட்டமும் தலைவர் எப்படி இவ்வளவு சிறப்பா, சிந்திச்சி செஞ்சு செயல்படுத்துகிறார் அப்படின்னு வயிற்று எரிச்சல்.  தமிழ்நாட்டு வரலாற்றிலேயே தொடக்கப்பள்ளி மாணவர்கள் சாலைக்கு வந்து… அந்த பத்திரிக்கை எதிர்த்து போராட்டம் பண்ணி இருக்காங்க… யாரு சிறுவர்கள் ? குழந்தைகள் வந்து போராடிட்டு இருக்காங்க…  யார எதிர்த்து… அரச எதிர்த்து இல்லை… அரசுக்கு ஆதரவு கொடுத்து…. எழுதிய அந்த பத்திரிக்கையை எதிர்த்து என தெரிவித்தார்.