தென் அமெரிக்காவில் உள்ள மெக்சிகோ நகரில் சில படங்களிலும், வெப் சீரிஸ் களிலும் நடித்த இளம் நடிகை மார்செலா. இவர் அங்கு காலம் காலமாக நடைபெற்று வரும் காம்போ என்ற பாரம்பரிய சடங்கு ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். இந்த சடங்கின் நோக்கம் உடலை தூய்மைப்படுத்துவது என கூறப்படுகிறது. இந்த சடங்கின் போது அதில் கலந்து கொள்பவர்கள் ஒரு லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். பின்னர் அவர்களது உடலில் சிறிய தீக்காயம் ஒன்று ஏற்படுத்தப்பட்டு அதில் குறிப்பிட்ட வகையான தவளையின் விஷ தன்மை வாய்ந்த சளியை தீக்காயத்தின் மேல் தடவுவர்.
இந்த சடங்கு உடலில் உள்ள நோய்களை அகற்றி உடலை தூய்மைப்படுத்தும் என அப்பகுதி மக்களால் நம்பப்படுகிறது. இந்த சடங்கை மெக்சிகோவின் தூரங்கோ என்ற பகுதியில் ஒரு தனி அறையில் வைத்து நடிகை மார்செல்லாவுக்கு நடத்தப்பட்டது. ஆனால் சடங்கு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே மார்செல்லாவுக்கு உடலில் சிறிய மாற்றங்களும், கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் சடங்கை செய்த சாமியார் இது சில மணி நேரம்தான் பொறுத்துக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
இருப்பினும் மார்செல்லாவுக்கு அதிகமான வயிற்றுப்போக்கால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து அறிந்த காவல்துறையினர் தப்பி ஓடிய அந்த சாமியாரை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் தவளை விஷத்தால்தான் நடிகை இறந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. நடிகை மார்செல்லாவின் மறைவுக்கு துராங்கோ பிலிம் கில்ட் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.