நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11:00 மணி அளவில் தொடங்கியுள்ள நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு முதன் முறையாக உரையாற்றினார். அவர் பேசியதாவது, 2047-ஆம் ஆண்டுக்குள் நாம் புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும். சுயசார்பு இந்தியாவை கட்டமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து வறுமையை ஒழிக்க வேண்டியது அவசியம். இந்தியாவின் வளர்ச்சியில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.