மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2026-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

வேலையில்லாத இளைஞர்கள், விவசாயிகளின் துயரம் மற்றும் உற்பத்தி வீழ்ச்சி போன்ற இந்தியாவின் உண்மையான பிரச்சனைகளை இந்த பட்ஜெட் கண்டுகொள்ளவில்லை என அவர் சாடியுள்ளார்.

பொருளாதாரச் சிக்கல்களுக்குக் ‘கோர்ஸ் கரெக்ஷன்’ (Course Correction) செய்யத் தவறிய இந்த பட்ஜெட், இந்தியாவின் எதார்த்த நிலையை உணராமல் இருப்பதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.