நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணி அளவில் தொடங்கியுள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல் முறையாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுகிறார். அவர் ஊழலை ஒழிப்பதற்காக மத்திய அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுப்பதாக கூறியுள்ளார். அதன் பிறகு கரீம் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான ஏழை மக்கள் தடையற்ற உணவை பெறுகிறார்கள். சட்ட பிரிவு 370 நீக்கம், முத்தலாக் தடை சட்டம் போன்ற விஷயங்களில் அரசு தீர்க்கமான முடிவு எடுக்கிறது. துல்லிய தாக்குதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மூலம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறோம். மேலும் முறைகேடு என்பது நாட்டிற்கு அச்சுறுத்தல் என்பதால் முறைகேடு இல்லாத இலக்கை நோக்கி அரசு பயணிக்கிறது ஜனாதிபதி கூறியுள்ளார்.