நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியுள்ள நிலையில், பட்ஜெட்டில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு விதமான சிறப்பு அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நடுத்தர வருடத்தினருக்கான வருமான வரி, பெண்களுக்கு சிறப்பு நிதி, மாணவர்களின் கல்விக்கு சிறப்பு திட்டம், ஏழை , எளிய மக்களுக்கு சிறப்பு திட்டம் போன்ற பல அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.