
நடப்பு 2024-25 ஆம் நிதியாண்டுக்கான முழுமையான மத்திய பட்ஜெட் இதுவரை தாக்கல் செய்யவில்லை. இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடந்ததால் இடைக்கால பட்ஜெட் மட்டும் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதில் அரசு மும்முரம் காட்டிய நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.
ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் முக்கிய நிகழ்வான பட்ஜெட் தாக்கல் இன்று தொடங்கியது. கடந்த காலங்களில் அனைத்து பட்ஜெட்டையும் பாஜக தனி பெரும்பான்மை பலத்துடன் தாக்கல் செய்த நிலையில் முதல் முறையாக பாஜக தலைமையிலான கூட்டணி அரசு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 7-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.
இணைளில் பருவநிலையை தாக்குப்பிடித்து வளரும் 102 வகை புதிய பயிர்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இயற்கை வேளாண்மையில் ஒரு கோடி விவசாயிகளை ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அமலாக்க மாநில அரசுகளுடன் சேர்ந்து திட்டம். நாடு முழுவதும் பத்தாயிரம் உயிரி ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்படும். நாட்டில் உள்ள வேளாண் துறையில் மானியம், கட்டமைப்பு உள்ளியவற்றிற்காக 1.52 கோடி ஒதுக்கீடு.