
நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் பல்வேறு விதமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது இணைய வழி வர்த்தகம் மீதான டிடிஎஸ் வரி குறைக்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதன்படி ஏற்கனவே 1 சதவீதம் டிடிஎஸ் வரி வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அது தற்போது 0.1சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் இதே போன்ற புற்று நோய்களுக்கான அடிப்படை சுங்க வரியிலிருந்து 3 மருந்துகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.