நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் நிதியமைச்சர் நிர்மலா செய்தாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்நிலையில் புதிய வருமான வரி சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்திற்கான வரிவிதிப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி நீண்ட காலம் முதலீடு லாபத்திற்கான வரி 10 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இதே போன்ற குறுகிய கால முதலீட்டிற்கான வரி 15 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
