நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இந்நிலையில் தங்கம், வைரம், வெள்ளி ஆகியவற்றுக்கான இறக்குமதி வரி உயர்த்தப்படுவதாக பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதனால் வரும் நாட்களில் தங்கம், வைரம், வெள்ளி போன்றவற்றின் விலை உயரும். ஏற்கனவே தங்கம் 1 சவரன் விலை ரூ.43,000த்தை  எட்டி உள்ளதால் இந்த அறிவிப்பு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.