நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

நமது இந்திய நாட்டின் மொத்த வருவாய் 1 ரூபாய் என்று வைத்துக்கொண்டால் அதில் 15 பைசா வருமான வரியில் இருந்து வருகிறது. மத்திய கலால் வரியிலிருந்து 7 பைசா, கார்பரேட் வரியில் 15 பைசா, ஜிஎஸ்டி வரியில் 17 பைசா, சுங்கு வரியில் 4 பைசா வருகிறது. கடனாக 34 பைசாவினை பெறுகிறது இந்தியா. இது போக 8 பைசா அளவுக்கு இதர வருவாயாக கிடைக்கிறது என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நாட்டின் மொத்த செலவினம் 1 ரூபாய் என்று வைத்துக்கொண்டால் அதில் 20 பைசா கடனுக்கு வட்டி கட்டுவதிலேயே போகிறது. மத்திய அரசின் திட்டங்களுக்கு 17 பைசா, மத்திய அரசு ஸ்பான்சர் செய்யும் திட்டங்களுக்கு 9 பைசா, மாநிலங்களுக்கு பிரித்து அளிக்க 18 பைசா, பென்ஷன் 4 பைசா, பாதுகாப்புக்கு 8 பைசா, மானியங்களுக்கு 7 பைசா, நிதி ஆணையத்துக்கு 9 பைசா என செலவாகிறது. இதர செலவுகள் என 8 பைசா குறிப்பிடப்பட்டுள்ளது.