நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணி அளவில் தொடங்கியுள்ள நிலையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையாற்றினார். இதைத்தொடர்ந்து தற்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளார். இதில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதோடு கொரோனா பேரிடரில் இருந்து நாட்டின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட வேகமாக மீண்டுள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இதற்கு உள்நாட்டு தேவை மற்றும் அதிகரித்து வரும் முதலீடே காரணம். மேலும் இந்த நிதியாண்டின் இரண்டாம் பாதியில் ஏற்றுமதியானது சராசரியாகவே இருந்தது எனவும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.