BSNL நிறுவனம் 4G மற்றும் 5G சேவைகளை கொடுக்கும் விதமாக அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தி கொண்டிருக்கிறது. தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக அடுத்தடுத்த அப்டேட்டுகளை கொடுத்துக்கொண்டிருக்கும் அந்நிறுவனம் தற்போது புது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. BSNL வாடிக்கையாளர்கள் 4G சேவைக்காக அதிக நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்து இருக்கிறது.

தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் பின் தங்கியிருந்தாலும் அந்த நெட்வொர்க்கை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்திருக்கிறது. 3 மாத சோதனைக்கு பின், BSNL அதன் 4G சேவைகளை தினசரி சராசரியாக 200 தளங்களில் துவங்கும். இத்தகவலை மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார்