இந்தியாவில் டாம் DAAM என்ற ஹாக்கிங் வைரஸ் ஆன்லைனில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட செல்போன்களில் இருக்கும் பாஸ்வேர்டுகள் திருடப்பட வாய்ப்புள்ளது என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி மத்திய அரசின் தொழில்நுட்பக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆண்ட்ராய்டு மொபைல் போன்களில் பரவி மெசேஜ்கள், அழைப்புகள் மற்றும் கேமரா உள்ளிட்டவைகளை ஹேக் செய்கிறது. அதிகாரப்பூர்வமற்ற இணையதளங்களில் இருந்து தரவிறக்கம் செய்வதை தவிர்க்க மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் வெப்சைடுகளில்  http://bit.ly/ மற்றும் tinyurl.com / ஆகிய URLகளை தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.