இன்றைய  காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே வயது வித்தியாசமின்றி செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். இதில் பல்வேறு செல்போன் செயலிகளை பயன்படுத்தி வந்தாலும் தகவல்களை பரிமாறுவதற்கு வாட்ஸ்அப் செயலியை தான் பெரும்பான்மையான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பயனர்களுக்கு ஏற்றாற்போல வாட்ஸ்அப் நிறுவனமும் அவ்வப்போது புதுப்புது அப்டேட்களை வெளியிட்டு வருகிறது.

அந்தவகையில் வாட்ஸ்அப்பில் ஸ்க்ரீன் ஷேரிங் (Screen Sharing) வசதியை விரைவில் ஆண்ட்ராய்டு மொபைல்களில் அறிமுகப்படுத்த இருக்கிறது மெட்டா நிறுவனம். அதாவது, கூகுள் மீட் (Google Meet) மற்றும் ஜூம் (Zoom) போன்ற வீடியோ கான்பரன்சிங் தளங்களில் இருப்பது போல் பயனர்கள் தங்களது ஸ்கிரீன்களை ஷேர் செய்ய முடியும். அடுத்த சில வாரங்களில் வாட்ஸ்அப்பில் இந்த ஸ்க்ரீன் ஷேரிங் அம்சம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.