நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது விஜயலட்சுமி கொடுத்த புகார் தொடர்பாக பேசிய நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகியில் ஒருவரான காளியம்மாள், இரண்டு ஆண்டுக்கு முன்பே அவர்கள் நாம் தமிழர் கட்சியில் இருக்கக்கூடிய பெண்களை தவறாக பேசியிருந்தார்கள். அண்ணனை ரொம்ப ஒருமையில் சாடி   ஒரு காணொளி வெளியிட்டார்கள், அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்திருந்தேன்.

அதை தொடர்ந்து அவர்கள் எனக்கு தனியா காணொளி போட தொடங்கியிருந்தாங்க. நான் அப்பவே மான நஷ்ட வழக்கு போடலாம்னு இருந்தேன். சரி வேணாம், கடந்து போகும் அப்படிங்குறதுக்காக விட்டோம். இப்போ விசாரணைக்கு அவங்க வாபஸ் பெற்றுட்டு போனாலும், திடீர்னு நாளைக்கு நீதிமன்றத்துக்கு வந்தாங்கன்னா…  எந்த மனநிலையில அவங்க எப்ப இருப்பாங்கன்னு யாராலும் கணிக்க முடியாது ?   எனவே நேரடியா விசாரணைக்கு வந்திட்டோம்.

விஜயலட்சுமி பின்னாடி யார் இருக்கிறார்கள் ? இது எந்த மாதிரியான மனநிலை ? இந்த மாதிரியான மாத்தி மாத்தி பேசுறவுங்களை தான்  ஊடகம் நம்பிக்கையா பார்க்குமா ? அப்படின்னு இருக்கு. இன்னொன்னு ஒரு பெரிய கட்சி, ஒரு பெரிய இயக்கம்.  இதுல நிறைய பேர் நம்பி பயணிக்கிறார்கள். எதிர்கால பெரிய நோக்கம் கொண்டு ஓடுகின்ற ஒரு அமைப்பா இருக்கு. அதுல சேத்தை வாரி இறைச்சிட்டு போறதை இனிமேல் சகித்துக் கொண்டிருக்க முடியாது.

இன்னைக்கு தமிழ்நாட்டில் மூன்றாவது பெரிய கட்சி.  லட்சக்கணக்கான இளைஞர்களும், இளம் பெண்களும், ஆண்களும் – பெண்களும் ஒன்றாக ஒருமித்து, நாளைய தலைமுறையை உருவாக்கணும்னு நினைக்கின்றோம். அந்த மாதிரியான சூழலில் இதை விட்டுட்டு இனிமேல் கடந்து போக முடியாது அப்படிங்கிறதுக்கான நிலைபாடாக தான் நாங்க எடுத்திருக்கிறோம்.

அண்ணன் மூன்றாவது கட்ட சுற்றுபயணத்தை தொடங்கி இருக்கணும்.  15 நாள், 20 நாளாக இதையே சொல்லி சொல்லி… யோசிச்சி பாருங்க உளவியலாக ஒரு மனுசன் எந்த அளவுக்கு பாதிப்படைய செய்ய முடியும். நிறைய ஊடகங்களை  தினசரி சந்திக்கும் போது இதே கேள்வியை தொடர்ந்து….  இன்னைக்கு கேக்குற கேள்வியை நாளைக்கு… நாளை மறுநாள்… ஏன்னா அந்தம்மா ஒவ்வொரு நாளும் ஒரு ஒரு வீடியோ போடுறாங்க. அப்போ அவங்களோட மனநிலை என்னவாக இருக்கிறது என்பதையே கணிக்க முடியாது என தெரிவித்தார்.