செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  தமிழ்நாட்டில் இருக்கிற மொத்த ரவுடிஸ்…  அதாவது சமூக குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் எல்லாம் உறுப்பினராக இருக்கானா ?  இல்லையா ? சேர்ந்து இருக்கானா ? இல்லையா ? நீ வா. கட்சிக்கு வா… வழக்கு எல்லாம் ரத்து பண்ணிடறேன்…  இப்படி சேர்த்து சேர்த்து கொண்டு போயிட்டு இருக்கீங்க.  நேர்மையாளன் என்றால் ? எல்லாத்தையும் பேசணும். அது என்ன நட்டம் வந்தாலும் சரி, எது வந்தாலும் சரி…. சரியா பேசணும்.  சரி ஏதோ அதை பேசனும்.

கொடநாடு கொலை வழக்கு பத்தி என் தம்பி அண்ணாமலை பேசுறதில்லையே. கொடநாட்டுல கொலை நடந்தது உண்மையா ?  இல்லையா ? அதை மட்டும் சொல்லுங்க… நீங்க எல்லாம் சொல்லுங்க பத்திரிக்கையாளர்கள்…   ஆறு பேர் செத்திருக்கான்…    கொன்னது யாரு ? செத்தது யார்? ஏன் கொன்னாங்க ?  எதற்காக செத்தான் ? அத பேசனும் இல்ல.  ஒரு முதலமைச்சர் இருக்கிற வீட்ல போய் கொலை பண்ணி இருக்காங்க… அத பத்தி பேசுறதே கிடையாது. அப்ப நீங்க நான் எல்லாம் எம்மாத்திரம்….

ஒரு நொடி கூட அந்த இடத்தில மின்சாரம் அனையாதுங்க … ஏன்னா அவுங்களுக்கு தனி தடம்,  தனி ட்ரான்ஸ்பார்ம். அந்த இடத்துல ஒரு மணி நேரம் மின்சாரத்தை அணைச்ச பெருந்தகை யாரு ? அப்ப அதெல்லாம் கேள்வி கேட்கணும்ல…  ஒரு நேர்மையாளன் என்றால் எதுக்கும் பயப்படக்கூடாது. நீ  வந்தா வா… வரலேன்னா போ….  உண்மை  உண்மைதான் அப்படி பேசணும். விவேகானந்தர் சொல்லி இருக்கார்… எதுக்காகவும்,  உண்மையை விட்டுக் கொடுத்திடாதடா… உண்மைக்காக எதையும் விட்டுக் கொடுடானு சொல்லுறார். அது மாதிரி உண்மையை பேசணும் என தெரிவித்தார்.