
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 14ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் அன்றே 2025-26 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின் மார்ச் 15ஆம் தேதி அன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதமும், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் பதிலுறையும் நடைபெற்றது. இதையடுத்து உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.
இந்நிலையில் சட்டசபையில் பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் தமிழ்நாட்டு மீனவர்கள், இந்திய மீனவர்கள் என்பதை ஒன்றிய அரசு மறந்து விடுகிறது என்பதால் இந்திய மீனவர்கள் என மீண்டும், மீண்டும் நினைவுபடுத்த அவசியம் ஏற்படுகிறது. இதே வேறு மாநில மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு கைது செய்யப்பட்டால் ஒன்றிய அரசு இப்படித்தான் நடக்குமா?.
இதை கண்டித்து கடிதம் எழுதினால் விடுதலை செய்கிறார்கள், அதன் பின் மீண்டும் கைது என இலங்கை அரசின் செயல் தொடர் கதையாக உள்ளது. இது போன்ற சிக்கலுக்கு கச்சத்தீவு மீட்பை நிரந்தர தீர்வு என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.