இமயமலை பயணத்தை முடித்துவிட்டு லக்னோ சென்ற நடிகர் ரஜினிகாந்த்,  அங்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து காலில் விழுந்து ஆசி பெற்றது தமிழகத்தில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று சென்னை திரும்பி அவரிடம் யோகி காலில் விழுந்தது குறித்து கேட்டபோது,  வயதில் குறைந்தவராக இருந்தாலும் யோகிகள்,  சன்னியாசிகள் காலில் விழுந்து வணங்குவது வழக்கம் என தெரிவித்தார்.