அதிமுக – பாஜக கூட்டணி முறிவு குறித்து எடப்பாடி பழனிச்சாமி வாய் திறக்கவில்லை என்று பலர் கூறி வருவதற்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். கூட்டணி முறிவு குறித்து மௌனம் கலைத்தார் இபிஎஸ்.  பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து  அதிமுக விலகுகுவதாக அறிவித்தது பொதுச்செயலாளர் முடிவல்ல.

ஒட்டுமொத்த தொண்டர்களின் முடிவு என்று எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேசியுள்ளார். ஒடிசா, மேற்கு வங்காளம் பிரதமர் வேட்பாளரை அறிவித்தா  தேர்தலை சந்திக்கின்றன. மாநில உரிமையை காக்க அதிமுக தேர்தலை சந்திக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.