தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியின் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி கிர்லோஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக ஆளுநராக செயல்பட்டு வரக்கூடிய திரு ஆர்.என் ரவி அவர்களுடைய செயலாளராக கிர்லோஷ் குமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்பு அவருடைய செயலாளராக ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல் செயல்பட்டு வந்தார். அவர் சமீபத்தில் மத்திய அரசு பணிக்கு  மாற்றம் செய்யப்பட்டார். பொதுவாக ஐஏஎஸ் அதிகாரிகளை பொருத்தவரை அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை பணியில் இருப்பார்கள். பெரும்பாலும் அந்த 3 ஆண்டுகள் பணி நிறைவடைந்த உடன், அல்லது அதற்கு இடையில் அவர்கள் வேறு துறைக்கு மாற்றப்படுவது வழக்கம். ஒரு சிலர் மட்டும் கூடுதலாக பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும்.

ஆனால் பணி அலுவல் காரணமாக அவர்கள் வெவ்வேறு துறைகளுக்கு தொடர்ந்து மாற்றப்படுவது வழக்கம். அந்த அடிப்படையில் இதற்கு முன்பு ஆளுநரின் தனி செயலாளராக இருந்த பாட்டீல் தற்போது மத்திய அரசு பணிக்கு மாற்றம்  செய்யப்பட்ட காரணத்தால் மற்றொரு மூத்த அதிகாரி கிர்லோஷ் குமார் அவர்கள் ஆளுநர் உடைய செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கிர்லோஷ் குமாரை பொறுத்தவரை தமிழகத்தில் நீண்ட அனுபவம் கொண்டுள்ளார் தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

குறிப்பாக கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்துள்ளார். அதேபோல வணிகவரித்துறையில் பணியாற்றியுள்ளார்  மெட்ரோவாட்டர் நிர்வாக இயக்குனராக செய்யப்பட்டுள்ளார். பல்வேறு துறைகளில் பணியாற்றி அனுபவம் இருக்கக்கூடியவர். இவர் மத்திய, மாநில அரசுகளுக்கு ஒரு பாலமாக இருந்து செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுநருடைய அனைத்து அலுவல் பொறுப்பு உள்ளிட்ட பல பணிகளை பார்ப்பார். மிக மிக முக்கியமான ஒரு பொறுப்பு இது. தமிழ்நாட்டில் எப்படி தலைமை செயலாளர் என்பது முக்கிய பொறுப்போ, அதே போல ஆளுநருடைய செயலாளர் என்பது ஒரு முக்கிய பொறுப்பாக இருக்கிறது. அதேபோல சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய மேலாண் இயக்குனராக வினய் நியமிக்கப்பட்டுள்ளார்.