விஜயகாந்த் அவர்களுக்கு நுரையீரல் சிகிச்சை வழங்கப்பட இருப்பதாக மியாட் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் அவர்களை பொருத்தவரை மிக தீவிரமாக அரசியலிலே களபணியாற்றி வந்தவர். தமிழ்நாட்டில்  இருக்கக்கூடிய பல மாவட்டங்களுக்கும் நேரடியாக சென்று அவர் களப்பணியை ஆற்றுவது, மாநாடு நடத்துவது என தொடக்கத்தில் மிக தீவிரமாக செயல்பட்டு வந்தார். அது மட்டுமல்லாமல் தேமுதிக கட்சி தொடங்கிய குறுகிய காலத்திலேயே எதிர்க்கட்சி தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையிலே அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நல குறைவு காரணமாக,  அவரது உடல்நிலை பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டது.  இதனால் கடந்த சில ஆண்டுகளாகவே தீவிர அரசியலில் ஈடுபடாமல் அவர் வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகின்றார்.

குறிப்பாக பொதுக்கூட்டங்களோ,  கட்சி நிகழ்ச்சிகளோ போன்றவற்றில் கூட பங்கேற்பது கிடையாது. ஓராண்டில் இரண்டு முறை அல்லது அதிகபட்சமாக மூன்று முறை தேமுதிகவினுடைய கோயம்பேட்டில் இருக்கக்கூடிய தலை மை அலுவலகம் வருவார். அங்கே மாவட்ட செயலாளர்கள்,  முக்கிய நிர்வாகிகள்,  தொண்டர்கள் மொத்தமாக இருந்தால் அவர்களை பார்த்து கையசைப்பார். இப்படியாகத்தான் இருக்கின்றது. அவரால் முழுமையாக பேச முடியாத ஒரு சூழலும் இருப்பதாக உடன் இருப்பவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் விஜயகாந்த் அவர்களுடைய உடல் நிலையில் கடந்த 18ஆம் தேதி அவருக்கு கடுமையான காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே அவர்கள் எப்போதும் மருத்துவம் பார்க்கக்கூடிய அருகில்… இருக்கக்கூடிய மியாட் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் மருத்துவமனையில் சோதனை செய்து பார்த்தபோது அவருக்கு அதிகமாக மார்புச்சளி இருந்ததும்,  அது மட்டுமல்லாமல் இடைவிடாது இருமலும்  அதிகமாக இருந்த காரணத்தால் உடனடியாக ICUவில் சேர்த்து அவரை தீவிரமாக கண்காணிக்க வேண்டிய ஒரு நிலை இருந்ததாக மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

எனவே கடந்த 18ஆம் தேதியே அவர் ICU வார்டிலே சேர்க்கப்பட்டு,  அவருக்கு தேவையான சிகிச்சை போன்றவை எல்லாம் அவருக்கு வழங்கப்பட்டது. அது மட்டுமில்லாமல் அவருக்கு ஏற்கனவே உடல் உபாதைகள் பல இருந்து வருகிறது. உடல்நிலை மற்றும் உறுப்புகள் உடைய செயல்பாட்டை துல்லியமாக கணிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ICU வார்டிலே அவர் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அதன் பிறகு தொடர்ச்சியாக அவருக்கு சேர்க்கை சுவாசம் கூட வைக்கப்பட்டது. ஏனென்றால் மார்புச் சளி,  அதுமட்டுமில்லாமல் இடைவிடாது இருமல் போன்றவை இருந்த காரணத்தினாலும் அவரால் சுவாசிக்க முடியாத ஒரு சூழல் இருந்து வந்ததாக கூறப்படுகின்றது.  எனவே செயற்கை சுவாசமும் அவருக்கு பொருத்தப்பட்டது.இரண்டு,  மூன்று நாட்களுக்குப் பிறகு அவரது உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு பிறகு அவர் தானாக…. இயற்கையாக  சுவாசிக்கக்கூடிய அளவிற்கு முன்னேறிய காரணத்தினால் செயற்கை சுவாசம் அகற்றப்பட்டதாக மருத்துவமனை சார்பில்  தெரிவிக்கப்பட்டது.

இரண்டு நாட்கள்,  மூன்று நாட்களுக்கு ஒரு முறை தொடர்ச்சியாக மருத்துவமனையில் இருந்து அதிகாரப்பூர்வமான செய்தி குறிப்புகள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றது. அதில் விஜயகாந்த் அவர்களுடைய உடல் நிலை எப்படி இருக்கின்றது ?  என்பது குறித்து விரிவாக அதிலே  தெரிவிக்கப்படும். எனவே இந்த நிலையில் தான் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுகிறது. ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்பினால் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,

மருத்துவமனை நிர்வாகம் கொடுத்து இருக்கக்கூடிய இந்த செய்தி குறிப்பு என்பது தேமுதிக தொண்டர்களுக்கு மட்டுமல்லாமல்,  தமிழக மக்கள் அனைவருக்குமே ஒரு அதிர்ச்சியான தகவலாக பதிவாகி இருக்கின்றது. அவரது உடல் நிலையில் ஒரு பின்னடைவு. தொடர்ந்து இன்னும் 14 நாட்கள் அவர் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்பது ஒரு சோகமான அதிர்ச்சியான தகவலாக பதிவாகி இருக்கிறது.