அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்து வழக்கில் திங்களன்று தீர்ப்பு வருகிறது. வி.கே. சசிகலா தொடர்ந்து மேல்முறையீட்டு வழக்கில் திங்களன்று காலை 10:30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. 2017 இல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு சட்ட விதிகளின்படி கூட்டப்படவில்லை.

தற்போது வரை அதிமுகவில் உறுப்பினராக உள்ளதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது என சசிகலா தரப்பு வாதிட்டது.கட்சியின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழு விதிகளின்படி கூடி தீர்மானம் நிறைவேற்றியதால் வழக்கு விசாரணை உகந்தது அல்ல என இபிஎஸ் தரப்பு வாதம். இடைக்கால பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என ஓ பன்னீர்செல்வம் தரப்பு வாதோட்டத்து குறிப்பிடத்தக்கது.