திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான கே.கே.எம் தங்கராசா இன்று காலமானார். திமுகவினரால் கருணாநிதியின் முரட்டு பக்தர் என்று அழைக்கப்பட்டவர் தான் கே.கே.எம் தங்கராஜா. இவர் திருச்சி மாநகர திமுக செயலாளர் உள்பட அக்கட்சியில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

அவரின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.கே.எம் ராஜா மறைவு குறித்து கேள்விப்பட்டு வேதனை அடைந்ததாகவும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் என்றும் கூறியுள்ளார்.