கடந்த 2006 – 2011 ஆம் ஆண்டுகளில் உயிர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தபோது வருமானத்திற்கு அதிகமாக 1 கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக கடந்த 2011 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்தது. அப்போது அவரது சொத்துக்களையும் லஞ்ச ஒழிப்புத்துறை முடக்கியது.

இந்நிலையில் அது தொடர்பான இரண்டு வழக்குகளில் நேற்று ஒரு வழக்கில் அவருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அவருக்கும் அவரது மனைவிக்கும் தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் அவரது சொத்துக்களை முடக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறி இருக்கிறது. அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டதை ரத்து செய்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பினை பிறப்பித்திருக்கிறது.