பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கில் 1 கோடியே 75 லட்சம் ரூபாய் சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. அந்த பிரதான வழக்கு தொடரப்பட்ட நிலையில், அந்த வழக்கிலிருந்து இருவரை விடுதலை செய்து விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பளிக்கும் போது லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில்  சொத்துக்கள்  முடக்கப்பட்டதை ரத்து செய்தும் தீர்ப்பளித்தது.

இந்த இரண்டு தீர்ப்புகளையும் எதிர்த்து தான் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தனித்தனியாக வழக்கு தொடரப்பட்டது. சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் எதிரான வழக்கில் தான் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் சொத்துக்கள் முடக்கத்தை ரத்து செய்த கிழமை நீதிமன்ற உத்தரவையும் ரத்து செய்ய வேண்டும். மீண்டும் சொத்துக்களை முடக்க வேண்டும் என்றே 2017 ஆம் ஆண்டு ஒரு அப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கில் தான் தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் நீதிபதி என்ன தெரிவித்துள்ளார் என்றால், ஏற்கனவே சொத்து குவிப்பு தொடர்பான பிரதான வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டு,  இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டடு, தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.   அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விடுவிக்கப்பட்ட சொத்துக்களை மீண்டும் முடக்குவது என்பது தேவையற்றது என்று நீதிபதியை தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

எனவே அபராதம் வசூலிப்பது மற்றும் அதற்கு அடுத்தபடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டும்படி லஞ்ச ஒழிப்பு துறைக்கு அறிவுறுத்தி இருக்கிறார்.  தற்போதைய நிலையில் விடுவிக்கப்பட்ட சொத்துக்களை முடக்க வேண்டியதில்லை என்றுதான் உயர்நீதிமன்றம் தற்போது உத்தரவு பிறப்பித்து,  லஞ்ச ஒழிப்பு துறையின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.