முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ் ஆதரவு அமைப்பின் தலைவர் எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன். இந்த சந்திப்பு இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுகவில் இணைந்த மனோஜ் பாண்டியனை, முதல்வர் ஸ்டாலின் வரவேற்று கைகுலுக்கி வாழ்த்தினார்.

மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்ததன் மூலம் ஆவலங்குளம் சட்டமன்றத் தொகுதியில் கட்சியின் வலிமை மேலும் அதிகரிக்கும் என கட்சியினர் தெரிவித்துள்ளனர். அவர் முன்பு ஓபினஸ் ஆதரவு அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் திமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவு ஆலங்குளம் அதிமுக எம்எல்ஏவான மனோஜ் பாண்டியன் இன்று மாலை 4 மணிக்கு தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் அதிமுக தற்போது பாஜகவின் கிளை கழகமாக மாறிவிட்டதாக குற்றம் சாட்டினார். திராவிடக் கொள்கையை உண்மையாகப் பின்பற்றக் கூடியது திமுக என்பதால்தான் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.