சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காருக்கு ரூ.60-ல் இருந்து ரூ.70ஆகவும், இலகுரக வாகனத்துக்கு ரூ.105ல் இருந்து ரூ.115ஆகவும், லாரி மற்றும் பேருந்துகளுக்கு ரூ.205ல் இருந்து ரூ. 250ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 55 சுங்கச் சாவடிகளில், பரனூர் சுங்க சாவடி உள்பட 29 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.