சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளியான அஜித் என்பவர் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து 5 காவலர்களை மாவட்ட எஸ்.பி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்க கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இது தொடர்பான விசாரணை நேற்று நடைபெற்றது. இந்த கைது செய்யப்பட்ட 5 காவலர்களையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல் நிலைய மரண வழக்குகளில் பின்பற்ற வேண்டிய சட்ட நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டன என்று காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.