மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, மாநிலத்தின் கடன் சுமையை குறைக்க அவசியம் இல்லை. கடன் என்பது பட்ஜெட்டின் ஒரு செயல்முறை. மாநிலத்தின் உற்பத்தி மதிப்பிற்கு ஏற்றவாறு கடன் வாங்கலாம்.

முதலீட்டிற்கு செய்யக்கூடிய செலவுகளை கடன் வாங்கி தான் செயல்படுத்த முடியும். வர்த்தகப் போர், AI வளர்ச்சி போன்ற காரணங்களால் எதிர்கால GDP குறித்து அறிக்கையில் இடம்பெறவில்லை. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக வர்த்தக கடன் கொடுத்து வருகிறது என்று அவர் தெரிவித்தார்.