
தடாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு கண்டெய்னர் லாரியில் ஏசிகள் கொண்டுவரப்பட்டது. இதில் 111 ஏசிகளை திருடி பாதி விலைக்கு விற்பனை செய்து உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையின் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது ஐபிஎஸ் சிக்னல் நீண்ட நேரம் ஒரே இடத்தில் இருந்ததை வைத்து ஓட்டுனரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் ஏசிகளை திருடி சென்ற 6 பேரை காவல்துறையின தேடி கைது செய்தனர். அதோடு அவர்களிடம் இருந்து 2 டன் திறன் கொண்ட 15 ஏசி பெட்டிகள் மற்றும் ரூ.18.71 லட்சம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.