அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் பா. வளர்மதியினுடைய இரண்டு வழக்குகளையும்  நேற்று தான் தாமாக முன்வந்து வழக்கை விசாரிப்பதாக நீதிபதி ஆனந்த வெங்கடேசஷ் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் இந்த இரண்டு வழக்குகளும் இன்று  விசாரணை நடைபெறும் என்று நேற்றே பட்டியலிடப்பட்டது இன்றைய விசாரணையில் கிழமை நீதிமன்றத்தில் நடந்திருக்க கூடிய விசாரணை அடிப்படையில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.

நீதிபதி ஆனந்த வெங்கடேசஷ், இந்த இரண்டு வழக்குகளையும்   எந்த காரணத்திற்காக தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டியது உள்ளது என்பதை அவர் குறிப்பிட்டார். அப்போது ஒவ்வொரு வழக்கிலும் எவரும் விசாரணையை எதிர்கொள்ள விரும்பவில்லை. நீதித்துறையை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும். கீழமை நீதிமன்றங்களின் செயல்பாடுகளை பார்க்கும் போது நீதித்துறையை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்.

வழக்குகளை தாமாக முன்வந்து விசாரிப்பதால் என்னை வில்லனாக பார்க்கின்றனர் என்றும் நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் கருத்து கூறி அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அதிமுகவினுடைய முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி ஆகியோரின் வழக்கையும் அடுத்த மாதம் அக்டோபர் 12ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார்.அக்டோபர் 12ஆம் தேதி இருவரும் தங்களுடைய தரப்பு வாதங்களை முன் வைக்க இருக்கின்றனர்.