தமிழகத்தில் சாமியார் உருவ பொம்மைகளை எரித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று அமைச்சர் உதயநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நான் பேசிய பேச்சை இனப்படுகொலை செய்ய தூண்டில் ஏன் என பிரித்து அதையே மக்களிடமிருந்து தங்களை காத்துக் கொள்ளும் ஆயுதமாக பாஜக தலைவர்கள் பயன்படுத்துகின்றனர். நியாயமாக இருந்தால் மதிப்பிற்குரிய பொறுப்பை வகித்து அவதூறு பரப்பும் பாஜகவினர் மீது வழக்கு தொடரலாம்.

இவர்களுக்கு பிழைப்பே இதுதான். சாமியார்களுக்கு தான் இந்த காலத்தில் அதிக விளம்பரம் தேவைப்படுகிறது. அதனால் ஒரு சாமியார் இடையில் புகுந்த என் தலைக்கு பத்து கோடி ரூபாய் விலை வைத்துள்ளார். சாமியாரை கைது செய்ய வேண்டும் என்று கோரி திமுகவினர் தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிப்பது மட்டுமல்லாமல் சாமியாரின் உருவ பொம்மையை எரிக்கின்றனர். இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று உதயநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.